ஒருநாள் போட்டியில் அதிக ரன்- அசாருதீன், கெய்லை தாண்டினார் விராட் கோலி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அசாருதீன், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளியுள்ளார் விராட் கோலி.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி 83 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 75 ரன்கள் அடித்தார்இந்த 75 ரன் மூலம் விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 206 ஒருநாள் போட்டியில் 198 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9423 ரன்கள் குவித்துள்ளார்.

அவர் 9378 ரன்களை தாண்டும்போது அசாருதீனையும், 9420 ரன்களை தாண்டும்போது கிறிஸ் கெய்லையும்பின்னுக்குத் தள்ளியுள்ளார் சச்சின் தெண்டுல்கர் 18426 ரன்களுடன் முதல் இடத்திலும் சங்ககரா 14234 ரன்களுடன்2-வதுஇடத்திலும்ரிக்கி பாண்டிங் 13704 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஜெயசூர்யா 13430 ரன்களுடன் 4-வது இடத்திலும்.

இன்சமாம் உல் ஹக் 11739 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். சர்வதேச அளவில் 16-வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இந்திய அளவில் 5-வது இடத்தில் உள்ளார்.

Comments

Popular posts from this blog

හොකොං තරගයේ සාමියි සංගයි වලියක් දා ගත්තේ මෙහෙමයි බලන්නකො සංගාගේ දැවි යාම සතුටු වෙන හැටි video

சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திவ்யா சத்யராஜ்

விசுவாசம் கெட்டப்பில் மகள் அனோஷ்கா பள்ளிக்கு வந்த அஜித் வைரலாகும் புகைப்படம்